senai kizganku vadai - 2026

அட.. புதுசா இருக்கே.. சேனைக்கிழங்கு வடை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
senai kizganku vadai - 2026

சேனைக்கிழங்கு வடை

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – ஒரு கப்
ஓர் அங்குலத் துண்டுகளாக வெட்டிய சேனைக்கிழங்கு – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)
பூண்டு – 3 பல்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பட்டை – 3 சிறிய துண்டு
கிராம்பு – 2
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய புதினா – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து பச்சை மிளகாய், உப்பு, சோம்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சேனைக்கிழங்கை அரை வேக்காட்டில் வேகவைத்து மசித்து, பருப்புக் கலவையுடன் சேர்த்து, வெங்காயம், புதினா சேர்க்கவும். எண்ணெயைக் காயவைத்து, மாவை விருப்பமான அளவில் வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.