health tips - 2026

அப்பாச்சி தீர்வு: மண்ணீரல் வீக்கம், ஆசனவாய் கடுப்பு, மலச்சிக்கல், வயிற்றுவலி, மூக்கில் இரத்தம்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

மண்ணீரல் வீக்கத்திற்கு…

கடுக்காயை உலர்த்தி தூள் செய்து காலை, மாலை பாலில் சிட்டிகையளவு கலந்து சாப்பிட்டு வர சில நாள்களில் மண்ணீரல் வீக்கம் குணமாகும்.

மலச்சிக்கல் சரியாக…

தொடர்ந்து பதநீர் சாப்பிட்டு வர நீண்டகால மலச்சிக்கல் கூட குணமாகும்.

ஆப்பிள் பழத்தை தோலுடன் சாப்பிட்டு வந்தாலும் மலச்சிக்கல் ஏற்படாது. வாழைப்பழமும் சாப்பிடலாம்.

ஆசனவாய்க் கடுப்பு சரியாக…

அருகம்புல்லையும் சிறு நெருஞ்சி வேரையும் ஒன்றாக இடித்து நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு இரண்டு அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர ஆசனக் கடுப்பு, நீர்க்கடுப்பு குணமாகும்.

குழந்தைக்கு வயிற்று வலி சரியாக…

கொத்துமல்லியை (தனியா) வறுத்து. நீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்துப் பிறகு அதில் ஓர் அவுன்ஸ் வடிகட்டி உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு வயிற்று வலி குணமாகும்.

அடிக்கடி மூக்கில் இரத்தம் கொட்டுகிறதா?

கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சர்க்கரையும் பாலும் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர மூக்கிலுள்ள ஜவ்வுப் பகுதி நன்கு பலமடைந்து, அடிக்கடி இரத்தம் கொட்டுதல் நின்று விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.