தரமான செய்கை…. தெறிக்கவிடும் ‘வலிமை’ புகைப்படம் – அதிரும் இணையதளம்

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா

வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அஜித் ஒரு கார் மற்றும் பைக் ரேசர் என்பவதால் வழக்கமாக அவர் நடிக்கும் படங்களில் அவர் ஸ்டைலாக மற்றும் அதி வேகமாக பைக் மற்றும் கார் ஓட்டும் காட்சிகளை இயக்குனர்கள் வைப்பது வழக்கம். அதுபோல, வலிமை படத்திலும் அஜித் அதிக எடையுள்ள ஒரு பைக்கை வேகமாக ஓட்டும் காட்சி எடுக்கப்பட்டதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக அஜித் கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவியது.

இந்நிலையில், வலிமை படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வலிமை படம் தொடர்பான அப்டேட் எதுவும் கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் தல ரசிகர்களுக்கு இப்படம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

thala-1
thala-1
thala

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.