
காது மந்தமா?
குப்பைமேனி இலையை இடித்து 400 மி.லி சாறு எடுத்து. சம அளவு சிறு பிள்ளையின் சிறுநீர் சேர்த்து, வசம்பு, மஞ்சள், சீயக்காய் வகைக்கு ஒவ்வொரு துண்டு தட்டிப் போட்டு அடுப்பிலேற்றி நன்றாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு வாரம் இருமுறை இதைத் தேய்த்துக் குளித்து வர காது மந்தம் சரியாகி விடும்.
காசம் சரியாக…
கரிசலாங்கண்ணியை வெயிலில் உலர்த்தி தூள் செய்து 150 கிராம் தூளில் 35 கிராம் அரிசித் திப்பிலியைத் தூள் செய்து கவந்து வைத்துக் கொண்டு காலை, மாலை கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்து 21 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர காசம் சரியாகும்.
மூட்டு வலிக்கு…
- வெப்பாலை இலையை நறுக்கி சட்டியிலிட்டு அது மூழ்குமளவு தேங்காயெண்ணெயை ஊற்றி அப்படியே வெயிலில் வைத்தால் மூன்று நாள்களில் அது பச்சை நிறமாக மாறி விடும். இந்த எண்ணெயை மூட்டு களில் தடவி வெந்நீர் ஒற்றடம் கொடுத்து வந்தால்
மூட்டுவலி குணமாகும். மூட்டு வலி இருந்தால் பருமனாக உள்ளவர்கள். உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
பேன் தொல்லையா?
நிறைய கருந்துளசி இலைகளை தலையணை மீது பரப்பி அதன் மீது ஒரு மெல்லிய வெள்ளைத் துணியைப் போட்டு படுத்துக் கொள்ளவும். பேன்கள் ஓடிவிடும்.
புண்கள் சரியாக…
குப்பைமேனி இலையை வறுத்துத் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து குழைத்து புண்கள் மீது தடவி வர புண்கள் விரைவில் ஆறும். இலேசான புண்ணாக இருந்தால் குப்பைமேனி இலையை பச்சையாகவே அரைத்துத் தடவலாம்.