அப்பாச்சி தீர்வு: பித்தம், ஹிஸ்டிரியா, வெட்டுக்காயம், ஜலதோஷம், அம்மை வடு..!

Published:

health tips - 2026

பித்தத்திற்கு…

நன்னாரி வேரை நீர் விட்டு வேக வைத்து, சிறிது பெருங்காயம் சேர்த்து அரைத்து சிறிதளவு நெய்யில் கலந்து சாப்பிட்டு வர பித்த மயக்கம் அதனால் ஏற்படும் தலைச்சுற்றல். பித்த வாந்தி எல்லாம் குணமாகும்.

ஹிஸ்டீரியா நோய் குணமாக…

மூளைக் கோளாறு, நரம்பு பலவீனம் இவற்றால் ஹிஸ்டீரியா நோய் வருவதுண்டு. முருங்கை வேரை நீர் சேர்க்காமல் அரைத்து காலை, மாலை இரு வேளையும் ஒரு சிட்டிகையளவு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர ஹிஸ்டீரியா நோய் குணமாகும்.

வெட்டுக்காயத்திற்கு…

காட்டாமணக்குச் செடியின் தண்டை இடித்துச் சாறு பிழிந்து வெட்டுக் காயங்களின் மீது தடவினால் பீரிட்டு வரும் இரத்தம் நின்று இரணம் ஆறி காயமும் குணமாகும்.

அம்மை வடுக்கள் மறைய…

அம்மை வார்த்து இறங்கிய பின் கறிவேப்பிலை ஒரு பிடி, கசகசா 20 கிராம், கஸ்தூரி மஞ்சள் 10கி இவற்றை மைபோல் அரைத்து வடுக்கள் இருக்கும் இடங்களில் பூசி அரைமணி நேரம் ஊற விட்டு வெந்நீரால் கழுவி விட வேண்டும். தொடர்ந்து 21 நாள்கள் இதுபோல் செய்து வர அம்மை வடுக்கள் மாறிப் போகும்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

ஜலதோஷத்திற்கு…

துத்தியிலையை இடித்து சாறு பிழிந்து சம அளவு நெய் கலந்து ஓர் அவுன்ஸ் சாப்பிட்டு வர கடுமையான ஜலதோஷமும் குணமாகும்.

Related articles

Recent articles

spot_img