health tips - 2026

அப்பாச்சி தீர்வு: அனைத்து பல்நோய்கள், வாய்நாற்றம் வறட்சி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

அனைத்து பல் நோய்களுக்கும்

பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாக பின்வருமாறு செய்யவேண்டும்.

கால்ரூபாய் எடை அளவுக்கு வால் மிளகையும், கிராம்பையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அரை ரூபாய் எடை அளவுக்கு கடுக்காயை
எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றுடன் மாசிக்காய் ஒன்றையும், ஜாதிக்காய் ஒன்றையும் எடுத்துக்கொண்டு இவை அனைத்தையும் இடித்துப் பொடியாக்கி சல்லடையில் சலித்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதிகாலையில் இதனை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் துலக்கினால் பற்கள் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும்.

பல்வலி தீர

நான்கு உப்புக்கல்லும், சிறிது புளியும் எடுத்து இடிக்கவேண்டும். இடித்ததை வலி எடுக்கும் பல்லின் மீது வைத்து 5 நிமிடம் எச்சிலுடன் ஊறவிட்டு வெளியே எச்சிலைத்துப்பிவிடவேண்டும். பின்பு வெதுவெதுப்பான வெந்நீரில் வாயை கொப்புளிக்கவேண்டும்.

பற்கள் வலிமைபெற

அன்றாடம் ஒரு கைப்பிடி அளவு எள்ளை அதிகாலையில் பல்துலக்கிய பின்னர் வெறும் வயிற்றில் உண்டுவர வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து உண்டுவர பற்கள் உறுதிபெறும். உடல்வலிமையடையும்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

வாய் நாற்றம்

படிகாரத்தை சட்டியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டுக்காய்ச்சி ஆறவைக்கவேண்டும். தினமும் மூன்று வேளை அதைக் கொண்டுவாயைக் கொப்பளித்துவர வாய்நாற்றம் நீங்கும்.

வாய்வறட்சி

500 கிராம் முள்ளங்கிக்கீரையை சிறிய துண்டுகளாக அரிந்துகொள்ள வேண்டும். அதை, 100மி.லிட்டர் எலுமிச்சம்பழச்சாற்றுடனும், 100 கிராம் நறுக்கிய வெங்காயத்துடனும் ஒரு தேக்கரண்டி அளவு மிளகுத்தூள், உப்பு ஆகிய வற்றுடன் சேர்த்து ஒரு மண் சட்டியில்இடவேண்டும். அந்தச்சட்டியை அடுப்பிலேற்றி லேசான நெருப்பில் வேகவைக்க வேண்டும். வெந்த பின் பகல் உண வோடு உண்டுவர வாய் வறட்சி அகலும். அத்துடன் சருமத்தில் காணும் பற்பல கோளாறுகளும் குணமாகும்.
ஆனால் பெரியவர்கள் தவிர இம்மருந்தை குழந்தைகள் உண்ணக்கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.