இதைச் செய்ங்க…போதும்! உங்கள் பாதங்கள் அழகா… மிருதுவாகும்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Health Care Tips to Help You Take Care of Your Feet and Toes1 - 2026

உங்கள் பாதங்களை பாதுகாக்க சில டிப்ஸ் இங்கே…! எல்லோருக்குமே காலும் பாதங்களும் மிக மிக இன்றியமையாதவைதான்! சிலருக்கு அழகுக்கு அழகு சேர்ப்பதும் பாதங்களே!

ஆங்கிலேயர்கள் அதனால்தான் ஷாக்ஸ் போட்டு, பாதங்களை வெளித் தெரியாமல் மறைத்தார்கள். நம் மண்ணிலோ, விளையாட்டு தொடங்கி, வயல் வேலைகள் முதற்கொண்டு, வீட்டு வேலை செய்யும் பெண்கள் வரை வெறும் பாதங்களுடன் தான் வளைய வருகிறோம். கோயிலுக்குப் போனாலும், சாலையில் பல நேரங்களில் நடக்கும் போதும் செருப்பு போடாமல்தான் நடக்கிறோம்.

அப்போது மண், சகதி என பலவும் பட்டு, சில நேரம் கொப்புளங்களும் வந்துவிடும். அப்படிப்பட்ட நேரத்தில் பாதங்களைப் பாதுகாக்க… சில டிப்ஸ் இதோ…!

* விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்

  • லேசாக சூடு செய்த வேப்பெண்ணையை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண் சரியாகும்
  • வாழைப்பூ, பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கை கால்களில் எரிச்சல் நீங்கும்
  • இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி மடக்கும் பயிற்சி செய்துவர வேண்டும்! அப்படிச் செய்தால் ரத்த ஓட்டம் சீராகும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.