பா.ஜ.க எம்.பி மகன் கைது ! குடிபோதையில் கார் விபத்து !

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் புகார் பெட்டி பொது தகவல்கள்

rubha - 2026மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் கோல்ஃப் க்ரீன்பகுதியில் உள்ள கிளப் கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மீது, நேற்று இரவு பயங்கர வேகத்தில் வந்த கார் ஒன்று மோதியது.

மோதிய வேகத்தில் சுவர் இடிந்தது. கார் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர், ஆகாஷ் முகோபாத்யாய் என்பது தெரிய வந்தது. இவர் பாஜக எம்.பி. ரூபா கங்குலியின் மகன் ஆவார்.rubha1 - 2026பிரபல பாடகி மற்றும் வங்காள நடிகையான் ரூபா கங்குலி 2015 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஹவ்ரா வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். இதையடுத்து பாஜக சார்பில் மாநிலங்களுக்கு தேர்வுச்செய்ய்ப்ப்ட்டார்ruba - 2026ஆகாஷ் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மிகவும் அபாயகரமான முறையில் காரை ஆகாஷ் ஓட்டி வந்ததாக விபத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, ஆகாஷ் முகோபாத்யாயிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ரூபா கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது மகனை தான் மிகவும் நேசிப்பதாகவும் எனினும் சட்டம் அதன் கடமையை செய்யும். இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.