சிபிஐ., இங்கே..! சிதம்பரம் எங்கே..!

Published:

pc mks - 2026சிபிஐ.,  இங்கே… சிதம்பரம் எங்கே-னு ஸ்டாலினை போராட்டம்
நடத்தச் சொல்லணும்.. வானத்துல இருந்து “சிதம்பரமா” கொட்டோ கொட்டுனு கொட்டும்..! அது தெரியாம இப்படி வீட்டுக்கு வந்து நோட்டீஸ் ஒட்டி, ஏன் அலையோ அலைன்னு அலையுறீங்க..?!

– இப்படித்தான் நக்கல் அடிக்கிறார்கள் ப.சிதம்பரம் காணாமல் போன விவகாரத்தில்!

ஆக.22 நாளை காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக தில்லி ஜந்தர் மந்தரில் ஏற்கெனவே போராட்டம் நடத்தப் போவதாக திமுக., அறிவித்துள்ளது. இந்நிலையில், முன்னர் திமுக., நடத்திய குடம் இங்கே தண்ணீர் எங்கே போராட்டத்தைப் போல்… சிபிஐ., இங்கே சிதம்பரம் எங்கே என்று போராட்டம் நடத்தப் போகிறார் ஸ்டாலின் என்று டிவிட்டர் பதிவுகளில் கருத்துகள் உலா வருகின்றன.

சிதம்பரம் காணாமல் போன விவகாரத்தில், எழுத்தாளர் தேவன் எழுதிய “ஜஸ்டிஸ் ஜகந்தாதன்” நாவலில், ‘குற்றம்சாட்டப் பட்டவர்’ ஊரை விட்டுத் தலமறைவாகி ஓடியதுதான் பிராசிக்யூஷன் தரப்பில் முக்கியமான வாதம் என்று ஒருவர் எடுத்துக் கொடுக்கிறார்.

அன்றே சொன்னார் எடப்பாடி…! சிதம்பரம் பூமிக்கு பாரம் என்று!
ஒரு மாநிலத்துக்கு சிஎம்,  அதுவும் மத்திய அரசோட செல்லப்பிள்ள, ஒரு முன்னாள் மத்திய உள்துறை மந்திரிய, பூமிக்கே பாரம் னு சொல்லும்போதே
அலர்ட் ஆகிருக்கணும் பசி… அலர்டு ஆகியிருக்கணும்! – என்கிறார் ஒருவர்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

வீடு வரை மீடியா
வீதி வரை கட்சிக்காரன்
கோர்ட்டு வரை வக்கீல்
ஜாமின் வரை ஜஸ்டிஸ்..
ஜெயிலு வரை யாரோ .. – என்று பாடலைப் பகிர்கிறார் ஒருவர்.

வாழ்க்கை ஒரு வட்டம்! 2010இல் @PChidambaram_IN  உள்துறை அமைச்சராக இருந்தபோது அமித் ஷா போலி துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதானார். தற்போது @AmitShah  உள்துறை அமைச்சராக உள்ள நிலையில், ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய #CBI விரைகிறது. Copy…!!! #PChidambaram – என்கிறார் ஒருவர்.

வித்தியாசம் 1.அது போலி வழக்கு. இது உண்மையான வழக்கு. 2. அமீத் ஷா தலைமறைவாக இல்லை. இவன் பிக் பாக்கெட் கைதி போல் ஓடி ஒளிகிறான். 3. அமீத் ஷாவிற்கு நீதி மட்டுமே பக்க துணை. நீதிபதிகள் அல்ல. இவனுக்கு நீதிபதிகள் பக்க துணை. நீதி அல்ல. என்கிறார் இன்னொருவர்… 

இப்படி இன்று டிவிட்டர், பேஸ்புக் பதிவுகளில் சிதம்பரம் குறித்த கருத்துகள்தான் சுற்றிச் சுற்றி வருகின்றன.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img