துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற தமிழச்சி இளவேனில்! குவியும் பாராட்டுகள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
ilavenil valarivan - 2026

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாளறிவன் தங்கம் வென்றுள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் – ஏர் ரைஃபில் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாளறிவன், 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த இளவேனில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3வது இந்தியர் என்ற பெருமையையும் இளவேனில் பெற்றுள்ளார்.

ilavenil - 2026

ரியோ டி ஜெனிரோவில் புதன்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்ற மூத்த ஐ.எஸ்.எஸ்.எஃப் வீராங்கனையான இளவேனில் வாளறிவன், அபூர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆனார்!

20 வயதான இளவேனில், 251.7 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த சியோனாய்ட் மெக்கின்டோஷ் 250.6 புள்ளிகளுடன் வெள்ளி வென்றனர்.

பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா ஏற்கனவே அதிகபட்சம் 2 ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.