‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ ! படமாகிறது !

அடடே... அப்படியா? இந்தியா சினிமா
Vajpayee - 2026

அரசியல் பிர்முகர்கள் வாழ்க்கை கதைகள் தற்போது படமாகி வெளி வருகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய். ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுத்து வெளியிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்க்கையும் படமாக வெளிவந்தது. இதுபோல் பால்தாக்கரே வாழ்க்கை படமும் வெளியானது.

தற்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாகின்றன. இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமாவாக எடுக்க இருப்பதாக உள்ளது.

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான வாஜ்பாய் சென்ற ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இந்த புத்தகத்தை மையமாக வைத்து வாஜ்பாய் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி நடைப்பெற்று வருகிறது.

இதுகுறித்து பட தயாரிப்பாளர் ஷிவ ஷர்மா கூறும்போது, “வாஜ்பாய் வாழ்க்கையை படமாக எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார். படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணியில் உள்ளோம்.

வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகரை தேர்ந்தெடுக்க உள்ளோம் இதற்கான தேடல் நடக்கிறது. படத்துக்கு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Posts by Suprasanna Mahadevan:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − nine =