
நடுரோட்டில் கல்லூரி மாணவியிடம் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்ற தனியார் பேரூந்து ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருமங்கலம் அடுத்துள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்தில் உள்ள டி.கரிசல் பட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவி உசிலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு , மாலையில் வீடு திரும்புவதற்காக சகதோழிகளுடன் அங்குள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் நடுரோட்டில் மாணவியை வழிமறித்து . மாணவியிடம் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்றார்.
இதனையடுத்து அந்த மாணவி அலறியடித்தபடி அபயக்குரல் எழுப்பவே, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இளைஞர் தாக்கியதில் காயம் அடைந்த மாணவி உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சிந்துப்பட்டி போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் டி.கரிசல்பட்டி தோட்டத்து வீடு பகுதியைச் சேர்ந்த தனபாண்டி (வயது 23) என்பதும், அவர் மாணவியை ஒருதலையாக காதலித்ததும் தெரிய வந்தது.
தனபாண்டி தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



