choker - 2026

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்வு..

சற்றுமுன்
choker - 2026
#image_title

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.45,440-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் மே.3 ஆம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.728 உயர்ந்தது. தொடர்ந்து மறுநாள் சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.5,680-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.45,440-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,176-க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1.00 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.79,000-ஆக இருக்கிறது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Posts by Sakthi Paramasivan.k:

Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam