தாயைக் கொன்று மூளையை பொரித்த மகன்! குடிக்க பணம் தராததால் ஆத்திரம்!

Published:

seetharam - 2026

சத்தீஸ்கர் மாநிலத்தில் தனக்குக் குடிக்க காசு தராத தாயைக் கொலை செய்து அவரது மூளையை எடுத்து சமைக்க ஆரம்பித்துள்ளார் ஒரு இளைஞர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்கார் எனும் பகுதியில் பூலோ பாய் என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு சீதாராம் ஓயாரான் என்ற மகன் இருக்கிறார். இவர் எத்தகைய வேலையும் செய்யாமல், மதுவுக்கு அடிமையாகி ஊரைச் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார்.

வேலையின்றி கையில் காசு இல்லை. குடிப்போதைக்கு மது வாங்க பணம் வேண்டுமே அதனால் தன் தாயை அடிக்கடி பணம் கேட்டுத் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார்.சில தினங்களுக்கு முன்பும் இதே போல் குடிப்பதற்கு பணம் கேட்க, அவரின் தாய் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்து ஆத்திரத்தில் சீதாராம் அவரை அடித்துக் கொன்றுள்ளார். அப்போதும் ஆத்திரம் நீங்காத அவர், தாயின் மண்டையை உடைத்து மூளையை வெளியில் எடுத்துள்ளார்.

மூளையை எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து சாப்பிட முயன்றுள்ளார். இதை பார்த்த சீதாராமின் சகோதரர் மனைவி அதிர்ந்து கத்த, அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.இதையடுத்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்க, மறைந்திருந்த சீதாராமை காவல்துறையினர் கைது செய்தனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img