மோடியின் பிறந்த நாள்… 7 நாட்கள் சேவை வாரமாகக் கொண்டாட முடிவு!

Published:

modi 2 1 - 2026

பிரதமர் மோடியின் பிறந்தநாளை தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு சேவை வாரமாகக் கொண்டாட பாஜக தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் 69 -வது பிறந்த நாள் செப்டம்பர் 17 அன்று கொண்டாடப் படுகிறது. அவரது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட பாஜக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.

செப்டம்பர் 14 முதல் 20 வரை நாடு தழுவிய ‘சேவை வாரம் கொண்டாடப்பட உள்ளதாக பாஜக தலைமை தெரிவித்துள்ளது. இந்தச் செய்தியை பாஜகவின் தேசிய துணைத் தலைவர் அவினாஷ் ராய் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தந்தைக்கு உதவியாக டீக்கடையில் பணி செய்தவராக இருந்து, இன்று நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார். அவரது வளர்ச்சியை பெருமைப் படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம் எனக் கூறினார்.

modi 1 2 - 2026

மேலும் பிரதமரின் வாழ்க்கை குறித்த புத்தகங்கள் வெளியிடவும், கண்காட்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மன வலிமைக்கு யோகா, உடல் வலிமைக்கு உடற்பயிற்சி என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இந்த மாதிரியான நிகழ்வுகளாலும் பாஜக அரசு மக்களைக் கவர்ந்து வருகிறது. பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்பது மோடியின் மற்றொரு திட்டம். அவரது பிறந்த நாளன்று இந்தத் திட்டமும் நிகழ்ச்சியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவையில் தொடர்ந்து இரண்டு முறை மாபெரும் வெற்றியைக் கண்ட பாஜக அரசு பிரதமர் மோடியின் பிறந்தநாளை உலக அளவில் பேச வைக்க திட்டமிட்டுள்ளது!

Related articles

Recent articles

spot_img