நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்காதீங்க..! ப.சிதம்பரம் தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ‘குட்டு’ !

Published:

Chidambaram - 2026

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்.5 வரை நீட்டித்து உத்தரவு வழங்கிய உச்ச நீதிமன்றம், இடைக்கால ஜாமீன் கேட்டு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கூறியது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜாமின் கேட்டு சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிதம்பரத்தை மேலும் காவலில் வைத்து விசாரிக்க விரும்பவில்லை. காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்ற காவல் முடிந்து விட்டதால், திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என கோரினார்.

ஆனால், இதனை ஏற்காத உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிதம்பரம் வரும் செப்.5 வரை நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு 5ஆம் தேதி கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதுவரை இடைக்கால ஜாமின் கேட்டு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img