திஹாருக்கு அனுப்பாதீங்க: கெஞ்சும் சிதம்பரம்! நீதிமன்றக் காவல் கொடுங்க: மிஞ்சும் சிபிஐ!

இந்தியா உரத்த சிந்தனை கட்டுரைகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
chidamabaram court - 2026

விதியின் விளையாட்டு என்றே குறிப்பிடும் படியாக, ப.சிதம்பரத்தின் வழக்கு சென்று கொண்டிருக்கிறது. சிபிஐ.,க்கு அன்று ஓடி ஒளிந்த ப.சிதம்பரம், இன்று அமலாக்கத்துறை கேட்காமலேயே, இன்னும் கைது செய்யப் படாமலேயே தாம் அமலாக்கத்துறையில் சரணடையத் தயார் என்றும், தன்னை திஹாருக்கு அனுப்பி விடாதீர்கள் என்றும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

தயவுசெய்து … நான் அமலாக்கத்துறையிடம் சரணடைகிறேன்; என்னை திஹார் சிறைக்கு மட்டும் அனுப்பாதீர்கள் என்று சிதம்பரம் நீதிமன்றத்தில் கெஞ்சுகிறார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை தொடர்கிறது என்றும், சாட்சிகளை கலைக்கவில்லை என்பதால், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பக் கூடாது என்றும் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினால் அது அவரை தொல்லைக்கு உட்படுத்துவதாக அமையும் என்றும் கபில்சிபல் நீதிமன்றத்தில் கூறினார்.

chidambaram behind bars - 2026

மேலும், ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சரணடைய தயாராக உள்ளார் என்று சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். வேண்டுமென்றால், சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்து கொள்ளட்டும் என்றும் அவர் நீதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும், சிபிஐ விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்ற காவலுக்கான காரணங்களை சிபிஐ முன் வைக்க வேண்டும் என்று கூறினார் கபில் சிபல்!

முன்னதாக, ஐ.என்.எக்ஸ் நிதி பரிவர்த்தனை முறைகேட்டு வழக்கில், ப.சிதம்பரத்தை 15 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்புங்கள்;வழக்கு குறித்த தகவல்கள் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளது என்று சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

நீதிமன்றக் காவலில் ப.சிதம்பரத்தை வைக்க உத்தரவிடப்பட்டால், ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த வாதங்களின் முடிவை நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.

ப.சிதம்பரம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப் படுவதற்கு முன்பும் பின்பும் திஹாரில் வைக்கப் பட வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்தி யுள்ளார் சுப்பிரமணிய சுவாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.