மோடி – 69: உலக அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆன ஹேஷ்டேக்ஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஹேஷ்டேக்குகள் டுவிட்டரின் உலக டிரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

modi twitter

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் சேவை வாரமாகக் கொண்டாடப் படுகிறது. பிரதமர் மோடியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செப்.17 – பாரத நாட்டின் முகத்தையே மாற்றி அமைத்த மாமனிதரின் பிறந்த நாளாக கொண்டாடப் படுகிறது. தூங்கிக் கொண்டிருந்த தேசத்தைத் தட்டி எழுப்பி, சீர்திருத்தப் பாதையில் நடை போட வைத்திருக்கும் பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாளை நாட்டில் பரவலாக சேவை வாரமாக பாஜக., கொண்டாடி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஹேஷ்டேக்குகள் டுவிட்டரின் உலக டிரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

ட்விட்டரில் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் இருந்தும் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ட்விட்டரில் உலக டிரண்டிங்கில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த ஹேஷ்டேக்குகளில், மோடிக்கான வாழ்த்து ஹேஷ்டேக்களே 7 இடங்களில் உள்ளன.

முதல் பத்து ஹேச்டேக்குகளில், ஏழு ஹேஷ்டேக்குகள் மோடிக்கான வாழ்த்து குறித்தானது. #HappyBdayPMModi, #happybirthdaynarendramodi #NarendraModiBirthday #HappyBirthdayPM #Modiji #PM Shri #Prime Minister – என இவை தற்போது டிவிட்டர் வழியே பகிரப் பட்டு வருகின்றன.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :