புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று ராஜினாமா செய்துள்ளார். ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் இன்று தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் மேதா பட்கர் அதிருப்தி அடைந்து ஆம் ஆத்மியை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து மேதா பட்கர் கூறுகையில், பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தியவர் பிரசாந்த் பூஷண். நாட்டின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்தியவர்களில் முதன்மையானவர். அதுபோல் யோகேந்திர யாதவ் அடித்தட்டு மக்களின் குறிப்பாக விவசாயிகளின் பேராதாரவைப் பெற்றவர். அவர்களை அப்படி நீக்கியிருக்கக் கூடாது. ஆம் ஆத்மியில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதை நான் விரும்பவில்லை. அதேபோல் ஒருவரே பல பொறுப்புகளை வகிப்பதும் சரியானதல்ல. ஆகையால் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்கிறேன்” என்று அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மேலும் பலரும் வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மேதா பட்கர் ராஜினாமா
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari