புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த 19 ஆண்டுகளாக தில்லி அசோகா ரோட்டில் உள்ள பங்களாவில் வசித்து வந்தார். மத்திய அமைச்சரான பிறகு அவருக்கு அரசு சார்பில் தில்லி அக்பர் ரோட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி வசித்து வந்த பங்களா ஒதுக்கப்பட்டது. நடிகர் சிரஞ்சீவி கடந்த ஜனவரி மாதம் பங்களாவை காலி செய்ததை அடுத்து ராஜ்நாத்சிங் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு குடியேறினார். நாடாளுமன்ற அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனின் வீட்டின் அருகே இந்த பங்களா அமைந்துள்ளது. மேலும், மூத்த ராணுவ அதிகாரிகள், நீதிபதிகளின் பங்களாக்களும் அருகில் உள்ளன. ராஜ்நாத் சிங் புதிதாகக் குடியேறியுள்ள பங்களாவில் பெரிய அளவில் புல்வெளிகள், தனி அலுவலகம், பார்வையாளர் கூடம், பாதுகாப்பு அறை ஆகியவை உள்ளன.
புதிய மாளிகையில் குடியேறினார் ராஜ்நாத்சிங்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari