பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் நபர்! சுட்டு வீழ்த்திய இந்தியா!

இந்தியா பொது தகவல்கள்
kashmir 2 - 2026

பஞ்சாப் எல்லைப் பகுதியில் உள்ள பரோபால் பகுதியில் நேற்றிரவு பாகிஸ்தான் நபர் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றார். அவரை இந்திய பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ” பரோபால் எல்லைப்பகுதியில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் வந்தார்.

சந்தேகத்திற்கு இடமான அந்த நபரை ‘உள்ளே வர வேண்டாம், திரும்பி செல்லுங்கள்’ என பாதுகாப்புப் படையினர் எச்சரித்தும், அந்த நபர் எச்சரிக்கையயும் மீறி சந்தேகிக்கும் வகையில், பாதுகாப்பு வேலி அருகே வந்துள்ளார்.

ஆபத்தை உணர்ந்த பாதுகாப்பு படையினர் அந்த நபரை சுட்டு கொன்றனர். பின் அவரை சோதனை செய்த போது, அவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது ” என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.