
சோயா வடை
தேவையானவை:
சோயா விதை – ஒரு கப்,
அரிசி மாவு – கால் கப்,
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி – ஒரு துண்டு,
மிளகு – அரை டீஸ்பூன்,
கறி வேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:

சோயா விதை களை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, கிரைண்டரில் கெட்டி யான விழுதாக அரைக்கவும் (தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது). அரைத்த மாவுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து, முழு மிளகும் சேர்த்து நன்கு அடித்துக் கலந்து உருண்டைகளாக உருட்டி, லேசாகத் தட்டையாக்கி நடுவில் விரலால் ஓட்டை போட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.