கேபிள்கார் விபத்து: ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நபர் கீழே விழுந்து உயிரிழந்த சோகம்!

helicopter - 2026

ஜார்கண்ட் கேபிள்கார் விபத்து களத்தில் இருந்து இந்திய வான்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மீட்பு பணிகளின் போது ஹெலிகாப்டரில் இருந்து போடப்பட்ட கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலே ஏற்றப்பட்டு விட்டார். எனினும், ஹெலிகாப்டரின் உள்ளே செல்ல முயற்சிக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் முழுக்க வீடியோவாக பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வீடியோ காட்சிகளின் படி, கேபிள் காரில் இருந்து மீட்கப்பட்ட நபர் மலை பகுதியில் பாறைகளின் மேல் பறந்து கொண்டிருந்த இந்திய வான்படை ஹெலிகாப்டரில் ஏற முயற்சிக்கிறார்.

எனினும், உள்ளே செல்ல முயற்சிக்கும் போது நிலை தடுமாறிய நபர் ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்தார். அதிக உயரத்தில் இருந்து மலையின் மேல் விழுந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த பகுதி வனப் பகுதியில் அமைந்து இருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தவரை சேர்த்து கேபிள் கார் விபத்து சம்பவத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தின் டியோகர் மாவட்டத்தில் உள்ள பைத்யநாத் கோயிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள கேபிள் கார் நடுவழியில் ஒன்றோடு ஒன்று உரசியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக கேபிள் காரில் பயணம் செய்த அனைவரும் நடுவழியில் சிக்கித் தவித்தனர். இவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு, உள்ளூர் கிராம மக்கள் மற்றும் இந்திய வான்படை வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி 32 பேர் கேபிள் கார்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் கேபிள் காரிலேயே சிக்கித் தவிக்கின்றனர்.

ஹெலிகாப்டர்களின் உதவியுடன் 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 15 பேர் இன்னமும் நடுவழியில் சிக்கித் தவித்து வருகின்றனர். கேபிள் கார்கள் வெவ்வேறு தொலைவுகளில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கின்றன.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

அதிகபட்சமாக 1500 அடி உயரத்தில் கேபிள் கார் தொங்கி கொண்டு இருக்கிறது. நேற்று சூரிய மறைவுக்கு பின் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு, இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது,” என ஏ.டி.ஜி.பி. ஆர்.கே. மாலிக் தெரிவித்தார்.

“விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சரென் தெரிவித்தார்.

“உலக புகழ் பெற்ற வழிபாட்டு தளமான டியோகர் மலைப்பகுதியில் கட்டப்பட்டு இருக்கும் கேபிள்கார் விபத்தில் சிக்கியது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் விபத்தில் காயமுற்றவர்கள் விரைந்து நலம் பெற பாபா பைத்யநாத்திடம் வேண்டிக் கொள்கிறேன்,” என ஆளுநர் ரமேஷ் பையஸ் தெரிவித்தார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories