இனி லைசன்ஸ் வாங்கறது ரொம்ப கஷ்டமாம்! ஏன் தெரியுமா?

இந்தியா தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
driving licence - 2026

மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள ஹாம்ஸ் என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் வாகனம் ஓட்டும் திறனை மதிப்பீடு செய்து ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் முறை உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ‘8’ அல்லது ‘S’ போட்டால் போதும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது தகுதியான ஓட்டுநர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சில சோதனை முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள ஹாம்ஸ் (HAMS) என்ற தொழில்நுட்பத்தை சோதனை முயற்சியாக உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

hams - 2026

ஸ்மார்ட் போன்களில் இந்த செயலியை பதிவேற்றி, அதை வாகன ஓட்டிகளின் முன்பக்கமாய் பொருத்துகின்றனர். இந்த செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், போனின் முன் மற்றும் பின்பக்க கேமராக்கள், சென்சார்கள் ஆகியவற்றின் மூலம் வாகன ஓட்டுபவரின் திறனை துல்லியமாக கண்காணிக்கிறது.

ALSO READ:  சபரிமலையில் பாரம்பரிய வெடி வழிபாடு நிறுத்தம்: தேவஸ்தானம் அதிரடி முடிவு!

வாகனைத்தை பின்நோக்கி சென்று நிறுத்துதல் (ரிவர்ஸ் பார்க்கிங்), ‘S’ வடிவத்தில் வளைந்து ஓட்டுவது போன்றவற்றையும் சரியாக சோதிக்கிறது.

இந்த தொழில்நுட்பம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பத்தவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெறுவதாக கூறப்படுகிறது. சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையால், ஓட்டுநர்களை மதிப்பீடு செய்வது எளிதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 7 =