காஷ்மீர் ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல்!

இந்தியா பொது தகவல்கள்
kasmir 1 - 2026

ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகரில் உள்ள மவுலானா ஆசாத் சாலையில் உள்ள சந்தையில் கையெறி குண்டு வீசி 15 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீநகரில் உள்ள ஹரி சிங் ஹை என்ற தெருவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் தெரிவிக்கிறார்.

ஸ்ரீநகரின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஹசீப் முகல், “இத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

kasmir - 2026

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, இது குறித்த விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இதே இடத்தில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.