
அப்துல் கலாமின் இடத்தில் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டியின் பெயர்!’ப்ரதிபா புரஸ்கார்’ பெயரில் மாற்றம்! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே விருது.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிரதிபா புரஸ்கார் அவார்டு என்ற பெயரை ‘ஒய்எஸ்ஆர் வித்யா புரஸ்கார் அவார்டு’ என்று மாற்றியுள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய செயலர் டி ராஜசேகர் உத்தரவு வெளியிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு அளிக்கும் பிரதீபா அவார்டுகளை இந்த ஆண்டிலிருந்து அரசாங்கப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அளிக்க உள்ளார்கள்.

சென்ற ஆண்டு வரை தனியார் பள்ளிகளில் படித்தாலும் இந்த விருதுகளை அளித்து வந்தார்கள். இம் மாதம் 11ஆம் தேதி மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களுக்கு இந்த பிரதீபா அவார்டுகளை அளிக்க உள்ளார்கள்.
இதுவரை மாநில அளவில் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த ஆண்டிலிருந்து மாவட்ட வாரியாக நடத்த உள்ளார்கள்.



