7 வயது சிறுவன் கடத்தல்: குற்றவாளியைப் பார்த்து அதிர்ந்த போலீஸார்!

Published:

boy kidnappd - 2026

மீர்பேட்டில் 7 வயது சிறுவனின் கடத்தல். குற்றவாளியை பார்த்து போலீசார் அதிர்ச்சி!

சினிமா, சீரியல் பார்ப்பதன் விளைவு பிள்ளைகளின் மேல் எந்த அளவு உள்ளது என்பதை தெரிவிக்கும் சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது .

பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன், ஒரு 7 வயது சிறுவனைக் கடத்தியுள்ளான். 3 லட்சம் ரூபாய் தரச் சொல்லி பெற்றோரை மிரட்டி உள்ளான். மீர்பேட்டில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்குமார் என்ற மென்பொருள் பணியாளர் தன் மனைவி மற்றும் மகன் அர்ஜுனுடன் மீர்பேட் டிஎஸ்ஆர் காலனியில் வசித்து வருகிறார். ஞாயிறு மதியம் 3 மணிக்கு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அர்ஜுன் திடீரென்று காணாமல் போனான். பெற்றோர் எல்லா இடங்களிலும் சிறுவனை தேட ஆரம்பித்தனர்.

சற்றைக்கெல்லாம் ராஜ்குமாருக்கு ஓரு போன் வந்தது. “உங்கள் மகனை கடத்தி விட்டோம். மூன்று லட்சம் கொடுத்தால் விட்டு விடுவோம்” என்று கூறிவிட்டு உடனே போன் கட்டாகி விட்டது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

அதனால் கவலை கொண்ட ராஜ்குமார் மீர்பேட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் கடத்தல்காரனுக்கு வலை போடத் தொடங்கினர்.

அதற்குள் கடத்தல்காரனிடமிருந்து அடிக்கடி பணம் கேட்டு ராஜ்குமாருக்கு போன் வரத் தொடங்கியது. அதனால் போலீசார் போன் சிக்னலைக் கொண்டு கடத்தல்காரனின் லொகேஷனை அடையாளம் கண்டு அங்கே சென்றனர்.

அந்த கடத்தல்காரரைப் பார்த்ததும் அனைவரும் ஒரேயடியாக அதிர்ச்சி அடைந்தனர். குற்றவாளி யாரோ முரடன் அல்ல. பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் . அவன் போலீசாரைக் கண்டதும் ஓட முயற்சித்தான். ஆனால் அவனைப் பிடித்து ஜீப்பில் ஏற்றினர். அர்ஜுனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீசார்.

ஆனால் இந்தக் கடத்தலில் வேறு யாருடைய கரமாவது உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாக மீர்பேட் இன்ஸ்பெக்டர் யாதய்யா தெரிவித்தார்.

சீரியலும் சினிமாவும் சிறுபிள்ளைகளின் குற்றச் செயல்களை தூண்டிவிட்டு வளர்கின்றன என்று உள்ளூர் மக்கள் விமர்சனம் செய்தனர். பெற்றோர் பிள்ளைகளின் நடத்தை மீது ஒரு கண் வைக்காவிட்டால் இப்படித்தான் கெட்டுப் போவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img