husband suicide - 2026

மனைவி தேநீர் போட்டு தரவில்லை என்று கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மனைவி டீ தயாரித்துக் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் ஞாயிறன்று ஒருவர் கண நேர ஆவேசத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ‘ஜீடிமெட்லா’வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகபூப் நகர் மாவட்டம் நாராயண பேட்டையைச் சேர்ந்த பக்துல அடிவய்யா(35), ஜோதி தம்பதி. 10 ஆண்டுகள் முன் வேலை தேடி ஹைதராபாத் வந்து புறநகர் பகுதியான ‘ஜீடிமெட்லா’ பாலய்யா நகரில் இவர்கள் இருவரும் வசித்து வருகின்றனர். இவர்களது இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்தானாம்!

ஞாயிறன்று காலை அடிவய்யா டீ போட்டுத் தரும்படி தனது காதல் மனைவியைக் கேட்டுள்ளார். மனைவி சற்று நேரம் கழித்து டீ போட்டுத் தருவதாகக் கூறியுள்ளார்.

ஆனால் உடனே டீ வேண்டும் என்று கூறி, அதனால் ஏற்பட்ட மனஸ்தாபத்தால், அடிவய்யா மது அருந்துவிட்டு அருகிலிருந்த க்வாரி நீர்க் குழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

சம்பவ இடத்திற்கு வந்த ‘ஜகத்கிரிகுட்டா’ போலீசார் உடலை போஸ்ட் மார்டத்திற்கு காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரித்து வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending