கடும் கட்டுப்பாடுகளுடன்… பம்பை வரை பயணம்!

Published:

sabarimala 04 - 2026

போலீசாரின் கட்டுப்பாடுகளுடன் நிலக்கல்லிலிருந்து சபரிமலை பம்பைக்கு சிறிய வாகனங்களில் பயணம் தொடங்கியுள்ளது.

ஒரு மணி நேரத்தில் நிலக்கல்லுக்கு திரும்பி வர வேண்டும் என்று போலீசார் வற்புறுத்தி வருகின்றனர்.

கடந்த வருடம் பெருமழை பெய்து பம்பை செல்லும் சாலைகள் கடும் சேதமடைந்தன . அதன் பின்னர் கடந்த சீசனில் பம்பைக்கு தனியார் வாகனங்கள் அனுமதிக்கப் படவில்லை. கேரள அரசு பேருந்தில் மட்டுமே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள் சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து மண்டல சீசனின் போதும் அவ்வாறே செய்யப்பட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இரு தினங்களுக்கு முன்னர் கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் … நிலக்கல்லில் இருந்து பம்பை வரை 12 இருக்கைகள் வரை உள்ள சிறிய ரக வாகனங்கள் சென்று பக்தர்களை இறக்கி விட்டு திரும்ப நிலக்கல்லுக்கு வரலாம் என்று கூறியது.

இதன் படி சிறிய வாகனங்கள் பம்பை வரை செல்ல போலீசார் அனுமதித்தனர் அதேநேரம் பம்பையில் பக்தர்களை இறக்கிவிட்டு ஒரு மணி நேரத்துக்குள் நிலக்கல்லுக்கு திரும்பி வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் பம்பை நோக்கி அனுப்பப்படுகின்றனர்

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

அதேபோல் டிரைவர் உள்ள வாகனங்கள் மட்டுமே அவ்வாறு அனுமதிக்கப்படுகிறது ஐயப்ப பக்தராக வரும் நபர்கள் ஓட்டி வரும் வாகனங்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்படுகிறது .

கடந்த ஆண்டு கார்த்திகை தொடக்கத்தில் தினமும் ஆயிரத்துக்கும் குறைவான வாகனங்கள் வந்தன. ஆனால் தற்போது 5 ஆயிரம் வாகனங்கள் வரை வருகின்றன இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிக்கப்படலாம் என்று போலீசார் கூறுகின்றனர்

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இந்த ஆண்டு அதிக அளவில் வாகனங்கள் பம்பை நோக்கி வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது இதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img