பாம்பு கடித்து இறந்த பள்ளி மாணவி: குடும்பத்தாரை சந்தித்து அமைச்சர்கள் இருவர் ஆறுதல்!

Published:

snake byte girl - 2026

திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவி ஒருவர் உயிரிழந்ததை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, மாநில அமைச்சர்கள் இருவர், பாதிக்கப் பட்ட மாணவியின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

கேரள கல்வித் துறை அமைச்சர் சி ரவீந்திரநாத் மற்றும் விவசாயத் துறை அமைச்சர் வி எஸ் சுனில் குமார் ஆகியோர், மாணவி ஷேகலாவின் தந்தையைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.

வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் உள்ள சர்வஜென அரசுப்பள்ளியில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. வகுப்பறையில் 5ம் வகுப்பு மாணவி சகிலா செரினை சுவற்றின் ஓட்டையில் பதுங்கி இருந்த பாம்பு கடித்துள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். இதனை ஆசிரியர் விஜில் பொருட்படுத்தாமல் போனதால் 10 நிமிடங்களில் மாணவி  சகிலா செரின் மயக்கமடைந்தார். மாணவி மயக்கம் அடைந்த பிறகே பாம்பு கடித்தது தெரியவந்துள்ளது. பிறகு மாணவியை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு விஷ முறிவு மருந்து இல்லாமல் போனதால் பள்ளிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சகிலா செரின் உரியிரிழந்துவிட்டார். இதனை கண்டித்து சுல்தான் பத்தேரி பள்ளி முன்பு மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய வயநாடு மாவட்ட ஆட்சியர் அலட்சியமாக இருந்தததாக கூறி ஆசிரியர் விஜில், அரசு மருத்துவர் மரியா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். எனினும் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கல்வித்துறை அலுவலகம் முன்பு பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆசிரியர் விஜில் மற்றும் மருத்துவர் மரியாவை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாணவி ஷேலா ஷெரினின் இறப்பு குறித்து ராகுல் காந்தி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஷேலா ஷெரின் படித்த வகுப்பறையில் இருந்த பொந்தினுள் மறைந்திருந்த பாம்பு ஒன்று கடித்து, அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். ஷேலா ஷெரின் படித்த சர்வாஜனா உயர்நிலைப் பள்ளி அந்த பகுதியில் இருக்கக்கூடிய மிகப் பழமையான பள்ளிகளில் ஒன்று. அதனால் அரசு உடனடியாக இந்தப் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை சீர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தப் பள்ளிக்குத் தேவையான உதவிகளை செய்ய நான் காத்திருக்கிறேன்…. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

கேரளாவில், பள்ளியின் உட்கட்டமைப்பு, பாதுகாப்பு சரி இல்லாததால் தான், மாணவி பாம்பு கடித்து இறந்துள்ளார். பள்ளியை கூட கவனிக்காமல் அலட்சியமாக இருந்ததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முதல்வர் பினரயி விஜயன் தான் பொறுப்பு. முதலில் அவர் moral தார்மிகமாக மன்னிப்பு கேட்டுவிட்டு, அதிகாரி, ஆசிரியர்களை பணி நீக்கம் செய்திருக்க வேண்டும். என்று, தமிழக பாஜக.,மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தன் அறிக்கை ஒன்றில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img