இலங்கை ஜனாதிபதியை வரவேற்ற மோடி! இரு தரப்பு உறவை பலமூட்டும் என நம்பிக்கை!

இந்தியா சற்றுமுன்
modi gotabaya rajapatcha - 2026

இலங்கை ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப் பட்டுள்ள கோத்தபய ராஜபட்ச இந்தியாவுக்கு வந்துள்ளார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள கோத்தபய ராஜபட்சவுக்கு இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் கருத்துகளைப் பதிவு செய்தார் பிரதமர் மோடி.

அவரது பதிவில்… இலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்த @GotabayaR அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். இலங்கை – இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும் அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும். – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.