கோலி வரிசையில் மனீஷ் பாண்டே! தமிழ் நடிகையை மணந்த கிரிக்கெட் வீரர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
ashrita manish - 2026

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே, நேற்று தமிழ் நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார்.

கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார் மணீஷ் பாண்டே. இரு தினங்கள் முன் இரவு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகா அணி,1 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

manishpandeyamrithashetty - 2026

இந்தப் போட்டியில் மணிஷ் பாண்டே 45 பந்தில் 60 ரன் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். கிரிக்கெட் போட்டியில் ஜொலித்த மணீஷ் பாண்டே, அந்தக் கையுடன் நேற்று காலை மும்பையில் தமிழ் நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார்.

மணீஷ் பாண்டேவின் திருமணத்துக்கு அவர் இடம்பிடித்துள்ள ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.