டாக்டர் பெண் படுகொலைக்குப் பின்…. ‘100’ விழிப்புணர்வு!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
IMG 20191204 WA0000 - 2026

இளம்பெண் கால்நடை மருத்துவர் படுகொலைக்குப் பின் இப்போது 100 எண் டயல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவசர உதவிக்கு 100 எண் டயல் செய்தால் உடனடியாக உதவி கிடைக்கும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது

இதையடுத்து தனியார் வாகனங்களின் மேல் டயல் 100 டிரைவ்… எழுதப்பட்டு வருகிறது

திசா கொலை வழக்கின் எதிரொலியாக போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹைதராபாத் மாவட்ட எல்லைக்குள் உள்ள பல ஆர்டிஏ அலுவலகங்களிலும் தனியார் வாகனங்களின் முன்னும் பின்னும் டயல் 100 என்று எழுத செய்துள்ளனர்.

அதிகம் பேருக்கு விவரம் தெரிவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹைதராபாத் மாவட்ட ஜேபிசி ஜே பாண்டுரங்க நாயக் தெரிவித்தார் .

மாவட்ட எல்லையில் உள்ள கைரதாபாத், சிகந்திராபாத், மலக்பேட், மெஹிதிபட்ணம், பண்ட்லகூடா ஆர்டிஏ அலுவலகங்களுக்கு வரும் வாகனங்களின் முன்னும் பின்னும் டயல் 100 நம்பரை தெளிவாக தென்படும்படி எழுதி வைக்கிறோம் என்று தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.