உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம்!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
K Vijay Kumar - 2026

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக தமிழகத்தின் கே.விஜயகுமார் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

இது குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகராக இருந்து வந்த கே.விஜயகுமார், இனி மத்திய உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.

தமிழகத்தில் முன்னர் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயரெடுத்தவர் விஜயகுமார். இவர் தற்போது, உள்துறை அமைச்சகத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார் என்பது, தமிழக அரசியலில் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப் படுகிறது.

கே.விஜயகுமாருக்கு தற்போது 67 வயதாகிறது. கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில், 1952ல் பிறந்து, 1975இல் ஐபிஎஸ் பணியில் இணைந்தவர்.

Former advisor to the Governor of the erstwhile state of Jammu and Kashmir, K Vijay Kumar, has been appointed as a senior security advisor in the Union Home Ministry

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.