அன்று பால் வியாபாரி… இன்று அமைச்சர்! என்னை பாத்து கத்துக்குங்க: மல்லா ரெட்டி!

இந்தியா சுய முன்னேற்றம் லைஃப் ஸ்டைல்
mallareddy telangana minister - 2026

சைக்கிளில் பால் வியாபாரம் செய்தேன். வெற்றிக்கு நானே உதாரணம் என்று கூறியுள்ளார் தெலங்காணா அமைச்சர் மல்லாரெட்டி. கஷ்டப்பட்டு உழைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு தானே நிதர்சனம் என்றார்.

தொழிலாளர், வேலை வாய்ப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் நல முன்னேற்ற அமைச்சர் மல்லாரெட்டி தன் சிறு வயதில் சைக்கிளில் அலைந்து பால் வியாபாரம் செய்ததாகவும் தற்போது அமைச்சராக இருப்பதாகவும் தெரிவித்தார் .

பால் விற்பனையில் தொடங்கிய தன் வெற்றிப் பயணம் மல்லாரெட்டி கல்வி நிறுவனங்கள் வரை முன்னேறி உள்ளது என்றும் அதற்கு கடும் உழைப்பே காரணம் என்றும் கூறினார்.

கடந்த வாரம், டிஎஸ் ஐ பாஸ் ( Telangana State Industrial Project Approval and Self-Certification System (TS-iPASS) Act) ஏற்பாடு செய்த ஐந்து ஆண்டுகள் முழுமையடைந்ததைப் பாராட்டும் நிகழ்ச்சிகாக ஏற்பாடு செய்த கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

ஐந்து ஆண்டுகளில் டிஎஸ்ஐபாஸ் வெற்றி பெற்றிருப்பது குறித்து வாழ்த்து தெரிவித்தார். இதற்காக முயற்சித்த அமைச்சர் கேடிஆருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது கேடிஆரை புகழுரைகளால் நனைய வைத்தார்.

வாழ்க்கையில் வெற்றிகள் பற்றி பேசுகையில் தான் வளர்ந்த வழிமுறை பற்றி குறிப்பிட்டார். தெலுங்கு மக்கள் புத்திசாலிகள். இளைஞர்கள் உழைத்து முயன்று லட்சியத்தை அடைய வேண்டும். அனைவரும் சேர்ந்து பணியாற்றி தெலங்காணாவை நாட்டிலேயே நம்பர் 1 இடத்தில் நிறுத்த வேண்டும்.

அமைச்சர் கேடிஆர் யங் அண்ட் டைனமிக் அமைச்சர். அவரை இளைஞர்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மல்லாரெட்டி குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.