மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கூட்ட நெரிசல் இல்லாத அதிவிரைவில் செல்லும் இந்த பயணம் பலரையும் கவர்ந்துள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான பல புதிய திட்டங்களையும் மெட்ரோ அறிமுகப்படுத்தி வருகிறது.
தற்போது மெட்ரோ நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், தங்களுடன் தங்களது சைக்கிளையும் எடுத்து செல்லலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் அந்த சைக்கிள் மற்ற பயணிகளுக்குப்பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், சிறிய அளவில், எடுத்துச்செல்ல வசதியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வாகனத்தை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையிலும், மாற்று வாகனத்தில் செல்லும் செலவை குறைக்கும் நோக்கத்திலும் இந்த வாய்ப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.