பிஎஸ்எல்வி வரிசையில் 50வது வெற்றிகரமான ராக்கெட்: இஸ்ரோ சிவன் மகிழ்ச்சி!

Published:

isro sivan - 2026

பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் 50வது வெற்றிகரமான ராக்கெட் ஏவப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

இன்று பிஎஸ்எல்வி சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது. இதை அடுத்து, குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பெயரையும் கூறி இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்து தெரிவித்தார்.

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி என்று சிவன் அப்போது குறிப்பிட்டார். இஸ்ரோவின் கடந்த கால மற்றும் நிகழ்கால முன்னோடிகளால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என்றும் சிவன் கூறினார்.

பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது. வெளிநாடுகளை சேர்ந்த மற்ற 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக வின்னிள் நிலைநிறுத்தப்பட்டன என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img