
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேறு சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்
அதனால் அந்த இளம்பெண்ணின் தந்தை தனது மகளை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் எடுத்து சென்றுள்ளார்.அப்போது போலீசார் இவரை கைது செய்துள்ளனர்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் ஜானுபூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் திவாரி என்பவர் தனது பணிக்காக மகள் பிரின்சியுடன் மும்பையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென்று திவாரி கையில் இரண்டு சூட்கேஸ்களுடன் ஆட்டோவில் ஏறி கல்யாணி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்
அப்போது ஒரு சூட்கேஸை ஆற்றில் எறிந்துவிட்டார் .பின்பு கையில் இருந்த ஒரு சூட்கேஸுடன் ஆட்டோவில் ஏறியுள்ளார்.
அப்போது அவர் வைத்திருந்த மற்றொரு சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது .
இதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் .
பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் திவாரி வைத்திருந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளார் .அந்த சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது

இதனையடுத்து போலீசார் திவாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்
அப்போது திடுக்கிடும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது
தனது மகள் வேறு சாதியை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்தார்.
அதனால் திவாரி தனது மகளிடம் காதலை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்

ஆனால் பிரின்சி இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ,கோபம் அடைந்த திவாரி தனது மகளை கொன்று ,மகளின் உடலை துண்டு துண்டாக வெட்டி 2 சூட்கேசில் அடைந்துள்ளார் .
அதன் பின்பு ஒரு சூட்கேஸை ஆற்றில் தூக்கி வீசிவிட்டு பின்பு ஒரு சூட்கேசுடன் ரயில் நிலையம் சென்றதாக போலீசார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .



