ராக்கெட் பயணத்தில் இஸ்ரோ சாதனை !ராமதாஸ் வாழ்த்து!

Published:

risat 2br1 - 2026

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1 ஆவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாயும் 75 ஆவது ராக்கெட்.

இஸ்ரோ சாதனை – பா.ம.க. நிறுவனர் ராமாதாஸ் டிவிட்டர் பதிவினில் கருத்துப் பதிவு செய்தார்.

  1. பி.எஸ்.எல்.வி – சி48 ஏவுகலம் இந்தியாவின் ரிசாட் 2பி.ஆர்.1 செயற்கைக் கோளையும், அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளின் 9 சிறிய செயற்கை கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பி.எஸ்.எல்.வி வகை ஏவுகலத்தின் 50-ஆவது விண்வெளி பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளது.
  1. பி.எஸ்.எல்.வி – சி48 ஏவுகலத்தின் இன்றைய சாதனைப் பயணம் ஸ்ரீஹரிஹோட்டா ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட 75 ஆவது பயணம் ஆகும். இத்தகைய சாதனைகளுக்கு காரணமான
    இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்! சாதனைகள் தொடரட்டும்!
ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img