வெரைட்டியா செய்யுங்க வெஜ் ப்ரோஸி!

Published:

veg - 2026

வெஜ் ப்ரோஸி

தேவையானவை:

வெங்காயம் – ஒன்று,

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்ந்த கலவை – ஒரு கப் (காலிஃப்ளவரை வெந்நீரில் சுத்தம் செய்யவும்),

பச்சை மிளகாய் – 3,

எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு,

தேங்காய் துருவல் – கால் கப்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து… பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் காய்கறி கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து… உப்பு, தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.

Related articles

Recent articles

spot_img