ஆரோக்கிய உணவு: எள் ரசம்

Published:

sesame - 2026

எள் ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு – ஒரு கப்,

தக்காளி – ஒன்று,

புளி – நெல்லிக்காய் அளவு,

பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 2,

எள், தேங்காய்துருவல், மிளகு, சீரகம், மஞ்சள்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,

நெய், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

rasam - 2026

எள்ளை வெறும் வாணலியில் வறுத்து, தேங்காய் துருவல், மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து எடுக்கவும். துவரம்பருப்பை வேகவிடவும். ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசல், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்,

மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்து வைத்த விழுது, வெந்த பருப்பு சேர்த்து, நுரைத்து வரும்போது இறக்கவும்.

நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க… ‘கமகமக’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார்!

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img