குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: ஒத்துழைத்த அனைவருக்கும் அமித் ஷா நன்றி!

Published:

amitsha rajyasabha - 2026

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019 இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப் பட்டது. முன்னதாக மக்களவையிலும் நிறைவேற்றப் பட்ட நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்ட இந்த மசோதா விரைவில் சட்ட வடிவாக்கம்பெற குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப் படும்.

இந்நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப் பட்டதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பாதிக்கப் பட்ட கோடிக்கணக்கான மக்களின் கனவு இன்று நனவாகியிருக்கிறது… என்றுகுறிப்பிட்டுள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது போல், பிரதமர் நரேந்திர மோடியும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா நிறைவேற்றப் பட்டதற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

அவர் தனது டிவிட்டர் பதிவில்… நம் நாட்டின் கருணை மற்றும் சகோதரத்துவ நெறிமுறைகளுக்கு இன்று முக்கிய நாள் என்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்த மக்களின் துன்பத்தை இது தணிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் மோடி #NarendraModi

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img