எதையும் புரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
KAMAL - 2026

பாஜக., அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது! மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வந்தது.

இதனிடையே, மேகாலயா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கெனவே ஊடுருவி சலுகைகளை அனுபவித்து வருபவர்கள், இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இந்த மசோதா குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். திரைஞானியும், அரசியல் அஞ்ஞானியுமான குழப்பவாதி கமல் வழக்கம் போல் குழப்பினார். இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரசியலமைப்பு சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தம் கடமை நமக்கு உள்ளது. ஆனால் பிழையில்லா நல் அமைப்பைத் திருத்த முற்படுவது மக்களுக்கும் மக்களாட்சிக்கு செய்யும் துரோகமே.

நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்திற்கு நிகரானது என்று மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும். இந்தியாவை ஒரு சாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை காந்தியின் 150ஆவது பிறந்த நாளை அவர் மறைவு நாளாக மாற்றிவிட்டால் அவர் கனவு கண்ட இந்தியா உருத் தெரியாமல் அழிந்துவிடுமா என்ன” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற திட்டங்கள் பலிக்காது எனக் கூறிய கமல், “முயன்று தோற்றவர், முயல்கின்றனர். இது ‘பாமர இந்தியாவல்ல’ உங்கள் பழைய திட்டங்கள் பலிக்க. ‘இளம் இந்தியா’ விரைந்து இதுபோன்ற திட்டங்களை நிராகரிக்கும். எங்கள் தாய் நாட்டை தந்தையர் நாடாக மாற்ற முயலும் பிதா மஹாக்களுக்கு இது புரிய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பொதுவாக, எந்த ஒரு பிரச்னையையுமே தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் சினிமாஸ்கோப்பில் பயாஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கும் குழப்பவாதி கமல், இந்தப் பிரச்னை குறித்தும் அவ்வாறே ஏதோ உளறித் தள்ளியிருக்கிறார்.

“மய்யத்தின் வாதம் ‘இதில் கொஞ்சம்’ ‘அதில் கொஞ்சம்’ கலந்து பசியாறும் சந்தர்ப்பவாதம் அல்ல. நமக்கு நல்லதே நடக்க வித்திடும் சிந்தனைகளைப் பற்றி தொடரும் பெருங்கூட்டம் நாம். சிந்தனைகளை மய்யம் கொள்ளச் செய்ய சூளுரை ஏற்றவரே எம் மய்யத்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார். அய்யோ பாவம் மய்யத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.