ஒரு வகுப்பறையில ஆசிரியர்கள் பண்ற வேலையா இது? வைரல் வீடியோ!

இந்தியா கல்வி
madhu teacher 1 - 2026

ஒரு பள்ளியின் மூன்று ஆசிரியர்கள் ஒரு வகுப்பறைக்குள் மது அருந்திய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மதுபனில் உள்ள சரேய நவீன் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. வீடியோ கிளிப்பில் உள்ள மூன்று பேரும் ஒரு வகுப்பறைக்குள் குடித்து விட்டு விருந்து சாப்பிடுகிறாரகள். மூன்று ஆசிரியர்களும் கஜேந்திர பைதா, சத்யேந்திர சவுத்ரி மற்றும் அபய் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த பிஹார் மாநிலத்தில் மதுபானம் விற்பனை மற்றும் நுகர்வு நிதீஷ்குமார் அரசாங்கத்தால் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

சில கிராமவாசிகள், வகுப்பறையின் ஜன்னலிலிருந்து செல்போனில் ஆசிரியர்கள் குடித்துக் கொண்டிருப்பதைப் படம் பிடித்தனர்.

வீடியோவின் நம்பகத்தன்மையை நிரூபிக்க விசாரணை தொடங்கப்படும் என்றும் அதற்கேற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுபனின் கல்வி அதிகாரி (பி.இ.ஓ) உமேஷ் குமார் சிங் அறிக்கையில் கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.