கடுங் குழப்ப நிலையில் ஆந்திர அசெம்பிளி! ‘ஐயா’ ஹாய்யா ரஷ்யாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

Published:

pawan kalyan3 - 2026

மாமியார் வீட்டுக்குச் சென்ற நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண். மனைவியோடு சேர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.

சில காலமாக பவன் கல்யாண் முழுமையாக அரசியலில் சுறுசுறுப்போடு ஈடுபட்டு வருகிறார். எப்போதும் ஜனங்களின் மத்தியிலே காணப்படுகிறார் ஜனசேனா தலைவர்.

ஒய்சிபியோடு இவர் அரசியல் தொடர்பாக எப்போதும் போராடி வருகிறார். தொடர் விமர்சனங்களால் ஜெகனை மூச்சுத் திணறடித்து வருகிறார்.

pawan kalyan2 - 2026

இத்தகைய பிசி ஷெட்யூலில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு மனைவி அன்னா லெஜெனோவா வுடனும் பிள்ளைகள் போலேனா, மார்க் ஷங்கருடனும் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மனைவியின் சொந்த ஊரான ரஷ்யா சென்றுள்ளார்.

ஆனால் ஜெகனை மதமாற்றம் செய்பவர் என்று டார்கெட் செய்யும் பவன் கல்யாண் இப்போது எதற்காக கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார் என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். வீட்டிற்கு ஒரு நீதி வெளியே ஒரு நீதியா என்று வினா எழுப்புகின்றனர்.

pawan kalyan - 2026

ஆனால் பவனின் மூன்றாவது மனைவி கிறிஸ்துவர் என்பதால் இவ்வாறு செய்கிறார்… இதில் தவறு என்ன என்று பவனை சப்போர்ட் செய்கின்றனர் ரசிகர்கள்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

எது எப்படியாயினும் பவனின் பர்சனல் டூர் கூட சோசியல் மீடியாவில் அரசியல் ஆக்கப்படுகிறது என்கின்றனர் நெட்டிசன்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img