
ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை 10.54 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய புவியியல் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், லடாக் பகுதி அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் சில வினாடிகள் பூமி குலுங்கியது. கட்டிடங்கள் திடீரென குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்று பீதிக்குள்ளாகினர்.
ஆனால் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாகவோ. உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாகவும் எந்த தகவலும் இல்லை. எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.
போலீஸார் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரியும் மணிகண்டன் நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார்.