பாய் ஃப்ரண்டோடு சாட்டிங்… தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து மரணித்த இளம்பெண்!

இந்தியா கிரைம் நியூஸ் லைஃப் ஸ்டைல்
girl died while phone - 2026

சம்ஷாபாதில் இந்த சோக சம்பவம் நேர்ந்தது. போனில் சாட்டிங் செய்து கொண்டே இளம்பெண் கட்டடத்தின் மீது இருந்து கீழே விழுந்து மரணமடைந்தார்.

சம்ஷாபாத் விமான நிலையத்தில் பணிபுரியும் இளம்பெண் சம்ஷாபாத் பகுதியில் வசித்து வந்தார். மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தார். பாய்பிரெண்டோடு போனில் சாட்டிங் செய்துகொண்டே எதிர்பாராமல் கட்டடத்தின் மேலிருந்து கீழே விழுந்து விட்டதாக தெரிகிறது.

செவ்வாயன்று ஜனவரி 14 மாலை 5 மணிக்கு இந்த சம்பவம் நேர்ந்தது. இறந்த பெண் கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டம் வித்யாகிரிநகரை சேர்ந்த சிம்ரன் (22) என்று போலீசார் அடையாளம் கண்டனர்.

girl died while chating with boy friend - 2026

தற்போதுவரை தெரிந்த விவரங்களின் படி… கர்நாடகாவைச் சேர்ந்த இளம்பெண் சம்ஷாபாத் ஏர்போர்ட்டில் கஸ்டமர் சர்வீஸ் செல் பணிகளில் பணிபுரிந்து வருகிறார்.

சம்ஷாபாதில் வசித்து வருகிறார். செவ்வாய் மாலை அவர் தான் குடியிருக்கும் வீட்டின் மேல் மாடிக்கு சென்று அங்கிருந்து போனில் பேசினார். அதன் பின் மேலிருந்து கீழே விழுந்துவிட்டார்.

ALSO READ:  செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!

தலையில் பலமாக அடிபட்டதால் இளம்பெண் அங்கேயே இறந்துவிட்டார் . இந்த சம்பவம் அங்கு உள்ளவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாடி மேல் இருந்து பெண் ஒரேடியாக கீழே விழுந்து இறந்ததை நேராக பார்த்த சிலர் பயத்திற்கு உள்ளாயினர். செய்தி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரிசோதித்தனர்.

பெண்ணின் உடலை மார்ச்சுவரிக்கு அனுப்பி குடும்பத்தினருக்கு செய்தியை தெரிவித்தனர். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.