அக்பரும் பாபரும் படையெடுத்து வந்து நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் என்ற உண்மையை ஏற்க வேண்டும். மகாராணா பிரதாப் போன்ற தலைவர்கள் காட்டிய வழியை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்எ ன்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
16ஆம் நூற்றாண்டு மேவார் மன்னர் ராணா பிரதாப்பின் 477-வது பிறந்த நாள் விழா, லக்னோவில் நடைபெற்றது.
இந்த விழாவில் யோகி ஆதித்யநாத் பேசியது…
மகாராணா பிரதாப், குரு கோவிந்த் சிங், சத்ரபதி சிவாஜி ஆகியோர் நமது முன்மாதிரி தலைவர்கள். அவர்கள் காட்டிய வழியை நாம் பின்பற்ற வேண்டும்.
ராணா பிரதாப்பிடம் இருந்து சுயமரியாதை, வல்லமை, நற்பண்புகள் ஆகிய பாடங்களை இளைஞர்கள் கற்க வேண்டும். அக்பர், அவுரங்கசீப், பாபர் போன்றோர் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள். நாட்டை ஆக்கிரமித்தவர்கள்்.
எவ்வளவு விரைவில் இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ அவ்வளவு விரைவில் நம் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
நம் நாட்டின் வளமான வரலாற்றை நாம் உயர்வாக மதிக்க வேண்டும். வளமான வரலாற்றை உயர்வாக மதிக்கும் திறனில்லா சமூகத்தால் தன் நில எல்லையை ஒருபோதும் பாதுகாக்க முடியாது…” என்று பேசினார்.



