திசா ஆப்க்கு முதல் வெற்றி! புகார் பெற்ற 6வது நிமிடம்.. கைதானவர் ஒரு பேராசிரியர்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
disha 1 vert - 2026

விஜயவாடா பஸ்ஸில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை. திசா ஆப் மூலம் கிடைத்த வெற்றி.

செவ்வாய்க் கிழமை அதிகாலை பஸ்ஸில் தன் பின் சீட்டில் அமர்ந்து ஆபாசமாக சீண்டிக் கொண்டிருந்த நபரால் அவமானத்துக்கு உள்ளான பெண் பயணி திசா ஆப் பட்டனை அழுத்தி உடனே போலீஸிடம் பிடித்துக் கொடுத்த சம்பவம் நேற்று ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் 43 வயதான எ. பசவய்யா திசா சட்டத்தின் கீழ் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூருவில் கைது செய்யப்பட்டு மாஜிஸ்ட்ரேட் முன்பு செவ்வாயன்று நிறுத்தப்பட்டார். இது திசா ஆப் பின் முதல் வெற்றி.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.21 மணிக்கு மங்களகிரி திசா கால் சென்டருக்கு எஸ்ஓஎஸ் கால் ஒன்று சென்றது. 4.27க்கெல்லாம் பாதிக்கப்பட்டவரிடம் போலீசார் சென்றடைந்தனர்.

disha - 2026

மேற்கு கோதாவரி மாவட்டம் சூப்பரின்டென்டென்ட் ஆஃப் போலீஸ் ராகுல் சிங் க்ரேவல் இது குறித்துக் கூறிய போது…

ஒரு பெண்மணி விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு பஸ்ஸில் பயணித்தார். சக பயணி அவரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விடியற்காலை 4.20 மணிக்கு சமயோஜிதமாக திசா ஆப் எஸ்ஓஎஸ் பட்டனை அழுத்தி மொபைல் போனை ஐந்து முறை அசைத்தார். அதே நேரம் 100 நம்பருக்கும் டயல் செய்தார். உடனடியாக விஷயம் எஸ்பி கவனத்துக்கு சென்றதும் அவர் ஏலூரு டிஎஸ்பி ஓ. திலீப் கிரணை அலெர்ட் செய்தார்.

அடுத்த ஆறாவது நிபிடம் அதிகாரிகள் புகார் வந்த ஏபிஎஸ்ஆர்டிசி கருடா பஸ்ஸை ஜிபிஆர்எஸ் மூலம் கண்டறிந்து பஸ்சை கலபாரு டோல் பிளாசாவில் நிறுத்தினார்.

விஜயவாடாவில் அரசுப் பணியில் இருக்கும் 40 வயதான அந்தப் பெண்மணி சக பயணியால் தனக்கு நேர்ந்த துயரத்தை போலிசாரிடம் விவரித்தார். திசா ஸ்பெஷல் ஆபீசர் தீபிகா பாடீலுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது.

ஏலூரு த்ரீ டவுன் காவல் நிலையத்தில் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர் பெத்தபாடு காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அவர் மீது 354a, 354 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்ட்ரேட் முன் செவ்வாய் மாலை நிறுத்தப்பட்டார்.

ஆந்திர மாநில அரசு செவ்வாயன்று திசா ஸ்கீமுக்கு மேலும் 48 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்புக்காக ஆந்திர அரசு திசா சட்டம் மற்றும் திசா போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றை அமைத்துள்ளது. இந்நிலையில், சிறப்பாகவும் விரைவாகவும் செயலாற்றிய போலீசாரை முதல்வர் ஜெகன் பாராட்டியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.