தில்லித் தேர்தல் முடிவுகள் முன் வைக்கும் செய்திகள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
arvind kejriwal - 2026

தில்லித் தேர்தல் முடிவுகள் முன் வைக்கும் செய்திகள்:

1.பாஜகவிற்குப் பின்னடைவா? கடந்த முறை பெற்ற இடங்களையும் வாக்குகளைவிடக் கூடுதலாக அது இம்முறை பெற்றிருக்கிறது. எனவே வருந்த ஒன்றுமில்லை. ஆனால் சிந்திக்க ஏராளம் இருக்கிறது.

2.காங்கிரஸ் கவனிக்க வேண்டிய விஷயம்: இரு கட்சி அரசியல் இல்லாத மாநிலங்களில் மூன்றாவதாக ஒரு கட்சி இருந்தால், குறிப்பாக ஒரு மாநிலக் கட்சி இருந்தால் . மக்கள் அதை பாஜகவிற்கு மாற்றாகக் கருதுகிறார்கள், காங்கிரஸை அல்ல.இதை தில்லியில் மட்டுமல்ல, பல மாநிலங்களில் பார்த்துவிட்டோம். ஏன் இந்த நிலை என்று சுயவிமர்சனம் மேற்கொள்ள வேண்டும்.

3.ஆம். ஆத்மியின் வெற்றி பாராட்டிற்குரியது. இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. சில இடங்களில் அதன் வாக்கு வித்தியாசம் குறைந்திருக்கிறது.
ஆனால் தில்லி முடிவுகள் மற்ற மாநிலங்களில் பிரதிபலிக்கும் என்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு. ஏனெனில் தில்லி தலைநகராக இருந்தாலும் சிறிய பகுதி. மொத்த வாக்களர்களே 1.6 கோடி பேர்தான். ஒருவகையில் அது ஒரு City Government. அதை மற்ற இடங்களுக்கு scale up செய்வது எளிதல்ல.

4. CAA எதிர்ப்புப் போராட்டங்கள் பாஜகவின் வெற்றியை பாதித்திருக்கிறதா?

1.இல்லை.கடந்த தேர்தலில் CAA, NRC, 370, முத்தலாக் பிரச்சினைகள் ஏதுமில்லை.இவை எல்லாம் 2019க்குப் பிந்தியவை. ஆனால் கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பாஜக அதிக இடங்களையும் வாக்குகளையும் பெற்றிருக்கிறது.

2. CAAஐ காங்கிரஸ் எதிர்த்த அளவிற்கு ஆம் ஆத்மி எதிர்க்கவில்லை. கெஜ்ரிவால் இந்தியா டுடே நடத்திய கூட்டத்தில் (conclave) உரையாற்றினார் என்பது உண்மைதான். ஆனால் போராட்டக்காரர்களை சென்று சந்திக்கவோ அவர்களிடம் உரையாற்றவோ இல்லை.

போராட்டம் பற்றி ஒரு பேட்டியில் கேட்ட போது “நான் தில்லியின் மகன் என்று நீங்கள் நினைத்தால் வாக்களியுங்கள்” என்று அவரது பதில் தொடர்பில்லாமல் இருந்தது. 370 விலக்கலுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி வாக்களித்தது என்பது நினைவில் கொள்ளத் தக்கது.

3. CAAஐ கடுமையாக எதிர்த்த காங்கிரஸ், சென்ற முறை பெற்ற வாக்கு சதவீதத்தில் பாதியளவே பெற்றுள்ளது (9.7%லிருந்து 4.6%) எனவே மக்கள் CAAவிற்கு எதிராக இருக்கிறார்கள் என்பதில் உண்மை இல்லை.

  • மாலன் நாராயணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.